யாழில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

0
318

யாழ்ப்பாண பகுதியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள  பொதுக் கிணற்றில் இருந்து இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குளிப்பதற்கு சென்ற பொழுது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பரபரப்பு சம்பவம்: அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்! | Man Was Recovered Corpse From A Well In Jaffna

தலையில் காயம் ஒன்று காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், அருளானந்தம் அமலதாஸன் 55 என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.