இங்கிலாந்து நாட்டில் சுமார் 285 வருடங்கள் பழைமையான எலுமிச்சைப் பழமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அலுமாரியொன்றுக்குள் இருந்தே இந்த எலுமிச்சைப்பழம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பழத்தில், ‘மிஸ்டர் பி லு ஃபிராஞ்சினி நவம்பர் 4, 1739 அன்று மிஸ் இ. பாக்ஸ்டருக்கு வழங்கப்பட்டது’ என பொறிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இது காதலர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட காதல் பரிசாகவும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த பழத்தை 1,786 டாலருக்கு ஏலத்தில் விட்டுள்ளனர். இந்திய மதிப்பின்படி 1,48,237 ரூபாய் ஆகும்.
