2024ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது ஒரு கத்தோலிக்க அருள்சகோதரி உட்பட இரு தனியார்களுக்கும் இரு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடன்பிறந்த நிலைகளுக்கான சையத் விருது இவ்வாண்டில் சிறைக் கைதிகளிடையே சேவையாற்றும் சிலே நாட்டின் அருள்சகோதரி Nelly León Correa, எகிப்து நாட்டு இதய அறுவை சிகிச்சை நிபுணர் Magdi Yacoub அவர்களுக்கும் இந்தோனேசியாவின் இரு இஸ்லாமிய அமைப்புக்களான Nahdlatul Ulama, Muhammadiyah ஆகியவைகளுக்கு இணைந்தும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடன்பிறந்த உணர்வு நிலை குறித்த வரலாற்று சிறப்பு வாய்ந்தது. திருத்தந்தைக்கும் Al-Azhar தலைமைக் குருவுக்கும் இடையே (04.02.2019) ஆம் திகதி கையெழுத்திடப்பட்டதை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட மனித உடன்பிறந்த நிலை சையத் விருது தற்போது ஐந்தாவது ஆண்டாக அபுதாபியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
