வரும் திங்களன்று பொது விடுமுறையா?

0
260

76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் திங்கட்கிழமை (05) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் .பிரதீப் யசரத்ன, வௌ்ளிக்கிழமை (2) தெரிவித்தார். இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்தார்.