பிரித்தானியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அழகிய இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து
பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்திலுள்ள அபர்தீன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், திங்கட்கிழமை, (ஜனவரி 29) மாலை 6.00 மணியளவில் தீப்பற்றியது.
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், அந்த குடியிருப்பிலிருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டது.
ஆனால், அதே தீயில் சிக்கி இரண்டு இளம்பெண்கள் உயிரிழந்துவிட்டார்கள்.
புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகின
இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் முதலான சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த பெண்களில் ஒருவர் பெயர் Shikshya, மற்றவர் பெயர் Aanchal Subedi. இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவர். அவர்கள் அபர்தீனிலுள்ள Aberdeen Grammar School என்னும் பள்ளியில் படித்தவர்கள் ஆவர்.
இந்த விபத்தில் அந்த இளம்பெண்கள் வளர்த்த ஒரு பூனையும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.