தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்!

0
278

தென்னிந்திய பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பதிவுசெய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் அவர் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் , நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் அரசியலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.       

தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! | Thamilaka Vetti Kalakam Actor Vijay Announced