41 வகையான புற்றுநோய் இலங்கையில் கண்டுபிடிப்பு..

0
309

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் 127 வகையான புற்றுநோய்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றில் 41 நோய்கள் இலங்கையில் இருப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் என்பது ஒரு காரணியால் ஏற்படும் நோயல்ல. பல காரணங்களால் ஏற்படும் நோய்.

ஆனால் அது குறித்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட 127 புற்றுநோய்களை உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 41 வகையான புற்றுநோய் கண்டுபிடிப்பு ; உலக சுகாதார அமைப்பு | 41 Types Of Cancer Discovered In Sri Lanka

பெப்ரவரி 4ஆம் திகதி உலகபுற்றுநோய் தினத்திற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விசேட வைத்திய நிபுணர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.