சான்றிதழ் பெற 10 ஆயிரம் ரூபா கேட்ட கிராம அலுவலர்!

0
310

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (1) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் குடியுரிமைச் சான்றிதழ் தொடர்பில் வருகை தந்திருந்த முறைப்பாட்டாளரிடம் பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.