கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

0
276

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று (01) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக வெளியான நிலையில், வினாத்தாளை முழுமையாக இரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய, குறித்த பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இன்று (01)  விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

அதன்படி, விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், முதல் பகுதி பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.