தலை சுற்றவைக்கும் பழங்களின் விலை

0
274

நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விற்பனையில் வீழ்ச்சி

அதன்படி ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவாகவும் நெல்லி ஒரு கிலோ 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 2500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

நாட்டில் தலை சுற்றவைக்கும் பழங்களின் விலை | Fruits Price Increase In Sri Lanka

அத்துடன் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட ஏனைய பழங்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.