பால ராமர் சிலை பிரதிஷ்டையின் ஒரு நாள் கழித்து அயோத்தில் உள்ள ராமர் கோவிலின் கருவறைக்குள் ஒரு குரங்கு நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
இந்த சம்பவத்தை விவரித்துள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா, பிரமாண்ட கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளை, செவ்வாய்க்கிழமை (23) மாலை 05.50 மணியளவில் ஒரு குரங்கு கோவிலின் தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்து புனிதமான பால ராமரின் சிலையை அணுகியது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்தவும் மெய்சிலிர்க்கவும் வைத்த குரங்கு சிறிது நேரம் அங்கிருந்ததுடன் பக்தர்களுக்கோ, ஊழியர்களுக்கோ எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை.
எனினும் விக்கிரகத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் குரங்கை நோக்கி விரைந்தனர். இருப்பினும் குரங்கு அமைதியாக பின்வாங்கி, பக்தர்கள் கூட்டத்தை கடந்து கிழக்கு வாசல் வழியாக கோவிலை விட்டு வெளியேறியுள்ளது.

குரங்கின் வருகையை ஒரு தெய்வீக ஆசீர்வாதமாக கருதுவதாகவும், அது பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலையை தரிசிக்க வந்த அனுமன் என்று நம்புவதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராமாயணத்தின் கதாநாயகனான ஸ்ரீ ராமரின் பரம பக்தரும், வானரக் கடவுளான ஹனுமானுடன் குரங்குகள் மீண்டும் மீண்டும் தொடர்புகொள்வதன் மூலம் இவ்வாறான கருத்துக்கள் பக்தர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
ஹனுமானின் அவதாரங்களாகக் காணப்படும் குரங்குகள், ராம ஜென்மபூமி இயக்கத்தின் வரலாறு முழுவதும் மீண்டும் மீண்டும் ஒரு சின்னமாக இருந்து வருகின்றன.
1990 அக்டோபர் 30 அன்று, பாபர் மசூதியின் மீது கரசேவகர்கள் தடைகளைத் தாண்டி காவிக்கொடிகளை ஏற்றியபோது, ஒரு குரங்கு மத்திய குவிமாடத்தில் அமர்ந்து, கூட்டத்தை பாதுகாப்புப் படையினரால் கலைத்த பின்னரும் கொடிகளில் ஒன்றை அகற்றாமல் பாதுகாத்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
