நயினை அம்பாளுக்கு இன்று மஹா கும்பாபிஷேகம்

0
314

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் பெருமளவிலான பக்தர்களுடன் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

நயினை அம்மம் ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தேறியது.

45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் 

பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டு யானை குதிரை என்பன வலம் வந்தன.

வெகு சிறப்பாக இடம்பெற்ற நயினை அம்பாள் மஹா கும்பாபிஷேகம் | Jaffna Nainai Ambal Maha Kumbabhishekam
வெகு சிறப்பாக இடம்பெற்ற நயினை அம்பாள் மஹா கும்பாபிஷேகம் | Jaffna Nainai Ambal Maha Kumbabhishekam

கும்பாபிசேஷகம் நடைபெற்றபோது ட்ரோன் மூலம் ஆலயத்த்தின் மீது பூக்கள் சொரியப்பட்டது. விசேடமாக யானை, குதிரை என்பன வரவழைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அதேவேளை மஹா கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வெகு சிறப்பாக இடம்பெற்ற நயினை அம்பாள் மஹா கும்பாபிஷேகம் | Jaffna Nainai Ambal Maha Kumbabhishekam
வெகு சிறப்பாக இடம்பெற்ற நயினை அம்பாள் மஹா கும்பாபிஷேகம் | Jaffna Nainai Ambal Maha Kumbabhishekam

நயினை அம்மன் கும்பாபிக்ஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.