அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: யாழ் ஆலயங்களில் விசேட பூஜைகள்

0
284

பல்வேறு சிறப்பம்சங்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று (2024.01.22) மதியம் 12:20 க்கு கோலாகலமாக இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு ஆலயங்களிலும் இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபர ஆழ்வார் ஆலயத்திலும் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.

சுதர்சன ஈஸ்வரக் குருக்கள் கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் இணைந்து காலை பத்து மணியளவில் ஸ்நபனம் அபிஷேகம் இடம்பெற்றதுடன் இராமருக்கான விசேட அபிஷேக பூசைகளும் இடம்பெற்றன. இதில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் வல்லிபுர ஆழ்வார் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : யாழ் ஆலயங்களிலும் விசேட பூஜைகள் | Ayodhya Ram Temple Kumbabhishekam Special Jaffna