பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களில் அமைந்துள்ளது ஹவாய் தீவு. அங்கு மஹானா பீச் என்று வித்தியாசமான ஒரு கடற்கரை அமைந்துள்ளது.
இந்த கடற்கரையானது ஏன் வித்தியாமானது என்றால் அங்குள்ள மணல்கள் பச்சை நிறத்தில் காணப்படும். உலகில் வெறும் 4 கடற்கரைகள் மட்டுமே இவ்வாறு பச்சை நிற மணல் கொண்டதாக உள்ளது.

இவ்வாறு இந்த கடற்கரை மணல்கள் பச்சை நிறத்தில் இருக்க என்ன காரணம்?
பழங்கால எரிமலையான மவுனா லோவாவின் தென்மேற்கு பகுதியிலிருந்து ஒலிவின் எனப்படும் துகள்கள் தோன்றுகின்றன. இந்த ஒலிவின் துகள்கள் இந்த கடற்கரை மணலில் கலந்துள்ளது. இதன் காரணமாக மஹானா கடற்கரையின் மணல் பச்சை நிறத்தில் உள்ளன. இந்த ஒலிவின் கற்களை ‘ஹவாய் வைரம்’ என்றும் அழைக்கின்றனர்.
இந்த வித்தியாசமான கடற்கரை மணலை பார்க்க வேண்டுமானால் இரண்டரை கிலோமீட்டர் டிரெக்கிங்கில்தான் செல்ல வேண்டும். ஹவாய் தீவுக்கு ஒரு மகுடமாக விளங்குகிறது இந்த மஹானா கடற்கரை.


