ஹொலிவுட் சூப்பர் ஹீரோக்களை நடிகர் ரஜினி துவம்சம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹொலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ஹிட் மேன், ஹல்க், தோர், ஜோக்கர் என ஹொலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்கள் கலங்கடித்து வருகின்றன. இவர்களின் வீர தீர சாகசங்களை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர் ஹீரோக்களை நடிகர் ரஜினி புரட்டி எடுக்கும் புகைப்படங்கனை AI தொழிநுட்பத்தில் உருவாக்கியுள்ளனர். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.








