விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான ‘காக்கா’ என்று அழைக்கப்படும் மனோகரனை மாவை சேனாதிராஜாவின் நாய் கடித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் குறிப்பிட்ட ஒருவருக்கு தலைமைப் பதவி வழங்கப்படவேண்டும் என்று கேட்பதற்காக மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றார் காக்கா.
பேசி முடித்து வெளியே வந்தபோது மாவையின் நாய் பாய்ந்து ஓடிச்சென்று காக்கா அவர்களின் காலைக் கடித்துவிட்டது. அதன் பின்னர் அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் காக்கா. மாவையின் நாய் தானாகக் கடித்ததா அல்லது யாராவது ஏவிவிட்டுக் கடித்ததா என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
‘மாவைக்கு இதுவரை வராத துணிவு மாவை வீட்டு நாய்க்காவது வந்திருக்கின்றதே’ என்று கூறிச் சிரித்தார்களாம் மாவையின் வீட்டில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார்.