ஆஸ்திரேலிய ஓபன்: முன்னணி நட்சத்திரத்தை வீழ்த்திய இளம் வீராங்கனை

0
389

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 16 வயது இளம் வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா ஆறாவது நிலை வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை 6-0 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இதன் மூலம் அவர் அவுஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்றை எட்டியதுடன் தனது தொழில் வாழ்க்கையின் முதல் டாப்-10 வெற்றியை பதிவு செய்தார்.

புதன்கிழமை (17) நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனின் இரண்டாவத சுற்று ஆட்டத்தில் துனிஷிய வீராங்கனையான ஒன்ஸ் ஜபீர் அட்டகாசமான ஆரம்பத்துடன் போட்டியை தொடங்கினார். எனினும் இளம் ரஷ்ய வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா, ஒன்ஸ் ஜபீருக்கு போட்டியின் இறுதியில் அதிர்ச்சி அளித்தார்.