ஜல்லிக்கட்டு களத்தில் கெத்தாக களமிறங்கிய நாய்: அவனியாபுரத்தில் சுவாரஸ்யம்

0
232

அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அந்த போட்டியின் போது சில சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது மைதானதிற்குள் நாய் ஒன்று புகுந்தது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

வீரர்கள் காளைகளை அடக்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியதை ஹாயாக படுத்து பார்த்துக் கொண்டிருந்த குறித்த நாய் சில நேரங்களில் அங்கும் இங்கும் ஓடி இடைஞ்சலும் கொடுத்தது.

Oruvan

ஓரமாக படுத்திருந்தபோது சில காளைகள் சீறி நாயை நோக்கி ஓடிவந்தன. “ஏம்பா நான் பாட்டுக்கு செவனேன்னு என்றுதானே இருக்கேன். என்னை ஏன் இடஞ்சல் பண்ணுறீங்க“ என்பது போல எழுந்து நகர்ந்து சென்றது.

ஆனாலும் மைதானத்திலேயே வெகு நேரமாக கிடந்த நாய் போட்டியை கண்டுகளித்துக் கொண்டு இருந்தது. ஓடி வரும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் இடையூறாக இருந்ததால் நாயை அங்கிருந்த பார்வையாளர்கள் சிலர் சத்தம் போட்டு விரட்டி விட முயன்றனர். ஆனாலும் அசராத அந்த நாய் அங்கேயே சுற்றி வந்தது. எது எவ்வாறாக இருப்பினும் இந்த நாயின் செயற்பாடு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.