விஜய்யுடன் மெர்சல் காட்டும் பிரபுதேவா, பிரசாந்த்: இணையத்தினை மிரட்டும் GOAT போஸ்டர்

0
311

நடிகர் விஜய்யின் GOAT – தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. பொங்கல் சிறப்பாக வெளியான இதில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் விஜய்யுடன் இடம்பெற்றிருந்தனர். விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என ஹொலிவுட் தரத்தில் டைட்டில் வைத்துள்ள வெங்கட் பிரபு படத்தையும் அதேபோல் மிரட்டலாக இயக்கி வருகிறாராம்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இதில் விஜய்யும் இளையராஜாவும் இணைந்து ஒரு பாடலும் பாடியுள்ளனர். இந்நிலையில் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

Oruvan