நடந்து சென்ற மஹிந்தவின் மனைவி: பின்தொடர்ந்த பாதுகாவலர்கள்

0
282

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் நடந்துச் சென்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிராந்தி ராஜபக்ச நடந்துச் செல்ல அவரது வலது மற்றும் இடது புறத்தில் பாதுகாவலர்களும் பின்தொடர்ந்துச் சென்றனர்.

இலங்கையில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக கடந்தகாலத்தில் திகழ்ந்த சிரந்தி ராஜபக்சவுக்கு பல அடுக்கு பாதுகாப்புகளும் இருந்தன.

தற்போது குறைந்தளவான பாதுகாப்புடன் சாதாரணமாக மக்கள் நடமாடு நடைப்பாதையில் அவர் சென்றுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விளையாட்டு அமைச்சுக்கு முன்பாக அவர் நடந்துச் செல்லும் காட்சியை காணொளியெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

இவர் காலை உடல் பயிற்சிக்காக நடந்துச் சென்றாக கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இதேவேளை, இவருக்கு எதற்கு எவ்வளவு பாதுகாப்பு? என்று சமூக வலைதளங்களில் விமர்னங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.