புத்தாண்டு தினத்தன்று (2024.01.01) ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள நோட்டோ (Noto) தீபற்பத்தின் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தும் செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன.
7.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானில் கடந்த ஜனவரி முதலாம் திகதி அந் நாட்டு நேரப்படி மாலை 4.10 மணியளவில் ஏற்பட்டது.
இது குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தியதுடன் கடலோரப் பகுதிகள் மக்கள் வெளியேறும் வகையிலான சுனாமி எச்சரிக்கையினையும் தூண்டியது.
The earthquake that struck Japan’s Noto peninsula on Monday was so strong that the coastline has moved up to 250 meters offshore due to significant land uplift. pic.twitter.com/XpxBMLRTUU
— Nahel Belgherze (@WxNB_) January 4, 2024
இந்த நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும் உள்ள பகுதியின் செயற்கைக்கோள் படங்கள், தீவிர கடல் அலைகளின் எழுச்சி கடற்கரையை 820 அடி (250 மீட்டர்) நீளம் வரை நீட்டித்துள்ளதை காண்பிக்கிறது. இது இது இரண்டு அமெரிக்க கால்பந்து மைதானங்களின் நீளத்தை விட அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகளின் தாக்கத்தினை அடுத்து சில துறைமுகங்கள் முற்றிலும் வறண்டு, படகுகள் செல்ல முடியாத நிலையினை எட்டியதையும் செய்மதி படங்கள் வெளக்காட்டியுள்ளன.