ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவில் கார் பேரணி!

0
260

இந்தியாவில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அமெரிக்காவில் கார் பேரணி நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-01-2024 திகதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் இந்து மதத்தினர் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-01-2024) கார் பேரணி நடத்தப்பட்டது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவில் கார் பேரணி! | Car Rally America Ayodhya Ram Temple Kumbabhisheka

குறித்த கார் பேரணியில் 216 கார்களில் இந்தியா, அமெரிக்கா மற்றும் காவிக்கொடிகளுடன் இந்து மதத்தினர் நூற்றுக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

ஹியூஸ்டனில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில் தொடங்கிய பேரணி 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து செல்லும் வழியில் உள்ள 11 கோவில்களை கடந்து ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதாம்பா கோவிலில் நிறைவடைந்தது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷத்துடன் பேரணி நடைபெற்றது.