யாழில் அதிரடி..! மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸ்

0
225

யாழ் நகரில் அமைந்துள்ள இ.போ.ச. பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைள் நேற்று  (08.01.2023) மாலை  பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்டது.

யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மாஅதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் கீழ் அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்பநாய்களுடன்  பொலிஸார்  சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் ஸ்ரிக்கர்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

யாழில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார் | Police Deployed With Sniffer Dogs In Jaffna

மேலும் எழுதுமட்டுவாழ் பகுதியிலும் பேருந்துகளை வழிமறித்து விசேட சோதனைகளும் இடம்பெற்றன.

யாழில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார் | Police Deployed With Sniffer Dogs In Jaffna