அதிபர் தேர்தலில் போட்டியிடும் பசில்: அமெரிக்க குடியுரிமையை கைவிட முடிவு…!

0
283

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நோக்கில் அவர் செயற்படவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் களமிறங்கும் பசில் : அமெரிக்க குடியுரிமையையும் கைவிட முடிவு..! | Pohottu Presidential Candidate Basil

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் பசில் ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்ச என அவர் கூறினார். எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அமெரிக்கா பறந்த பசில்

இதேவேளை அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை அடுத்து தேசிய அமைப்பாளர் பதவி பசில் ராஜபக்சவிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலில் களமிறங்கும் பசில் : அமெரிக்க குடியுரிமையையும் கைவிட முடிவு..! | Pohottu Presidential Candidate Basil