இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்

0
295

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன (Kshenuka Dhireni Senewiratne) நியமிக்கப்பட்டுள்ளார். சேனுகா திரேனி செனவிரத்ன நேற்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சேனுகா திரேனி செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாகவும் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தாய்லாந்து நாட்டுக்கான தூதுவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மிலிந்த மொரகொட இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் கடந்த செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்ததையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.