காதலருடன் லண்டனில் புத்தாண்டு கொண்டாடிய தமன்னா: வைரலாகும் காணொளி

0
244

நடிகை தமன்னா இந்த 2024ம் ஆண்டு புத்தாண்டை தனது காதலர் விஜய் வர்மாவுடன் சேர்ந்து வரவேற்றுள்ள காணொளி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. நடிகை தமன்னாவும், பிரபல பொலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருகின்றனர்.

தங்களின் காதலை வெளிப்படையாக அறிவித்த இவர்கள் இருவரும் ஜோடியாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமன்னா, விஜய் வர்மா இருவரும் புத்தாண்டை கொண்டாட தனது நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் இடையே கவனம் ஈர்த்து வருகிறது.