இலட்சத்தீவில் சுழியோடிய பிரதமர் மோடி!

0
320

இந்தியாவில் உள்ள மிகச்சிறிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான இலட்சத்தீவு தீவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அத்துடன் சுழியோடிகளின் ஆடைகள் மற்றும் கருவிகளை அணிந்து கடலுக்கு அடியில் சுழியோடியுள்ளார்.

அதில் சாகசத்தை விரும்புவோர் யாராக இருந்தாலும், உங்களின் சுற்றுலா தலங்கள் பட்டியலில் ஒன்றாக இலட்சதீவு இருக்க வேண்டும். நான் இலட்சதீவில் தங்கியிருந்த சமயம், சுழியோடினேன். அது ஒரு உற்சாகமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.