2024 இல் இலங்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு: கர்தினால் மெல்கம் ரஞ்சித்

0
293

2024ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாய்ப்புள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இலங்கையானது சரியான தலைமைத்துவம் இல்லாமல் ஒவ்வொரு பக்கமாகச் செல்லும் கப்பல் போன்றுள்ளது. இந்நிலைமை இவ்வாண்டு மாற வேண்டும் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.

”கடந்த பல வருடங்களாக இலங்கை ஊழல் மற்றும் ஏழ்மையில் உள்ளது. இலங்கை எதிர்பார்த்த மாற்றத்தை அனுபவிக்கும் ஆண்டாக 2024 அமையும். இது ஒரு தீர்க்கமான ஆண்டு. நமது நாட்டிற்காக பிரார்த்தனை செய்வோம்.

இலங்கையின் தலைமைத்துவம் நேர்மையாக செயற்படவில்லை. அதனால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் பின்புலத்தில் கர்தினாலின் இந்த கருத்து மக்களை சிந்திக்க வைத்துள்ளது.