ஈழத்து குயில் கில்மிசாவுக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு

0
378

தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலந்து கொண்ட ஈழத்து குயில் கில்மிஷா முதல் பரிசை வென்றார்.

இவ்வாறான நிலையில் தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார். இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய நிலையிலேயே சிறுமி கில்மிஷா இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு அடித்த பெரும் அதிர்ஷடம்! திரைப்படத்தில் வாய்ப்பு | Kilmisha Singing Opportunity South Indian Film

இதேவேளை நாட்டில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த அனைவர்க்கும் நன்றியையையும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை தொடர்பில் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு அடித்த பெரும் அதிர்ஷடம்! திரைப்படத்தில் வாய்ப்பு | Kilmisha Singing Opportunity South Indian Film

இதேவேளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இசைத்துறையில் மிகப்பெரிய பின்னணி பாடகராவதே தன்னுடைய விருப்பம் என்றும் அதனுடன் வைத்தியராக வேண்டும் என்ற இலட்சியத்தை நோக்கியும் பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.