இஸ்ரேல் படையினரின் தாக்குதலுக்கு மத்தியில் உயிர் தப்பி காஸாவின் தென் பகுதிக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 வயதான இஸ்மான் அல் மஸ்ரே என்ற இந்த பெண் காஸாவின் வடக்கில் வசித்து வந்துள்ளார். இஸ்ரேல் விமானப்படையின் தாக்குதல் நடத்தும் போது அவர் தனது கணவருடன் தென் பகுதி நோக்கி தப்பிச் சென்றுள்ளார். இஸ்மான் நேற்று (28) இரண்டு பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றேடுத்துள்ளார்.
காஸாவின் தென் பகுதியில் வைத்தியசாலை வசதிகள் எதுவுமில்லை. குறைந்த வசதிகளுடன் கூடிய பாடசாலை ஒன்றில் இயங்கும் வைத்தியசாலையில் இருந்த பிரசவம் நடந்துள்ளது.