2024ல் எரிபொருள், எரிவாயு விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

0
274

இலங்கையில் எதிர்வரும் (2024) ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட் VAT பெறுமதி சேர் வரி 18 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதனால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

2024ல் எரிபொருள், எரிவாயு விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! | Fuel And Gas Prices Likely To Increase In 2024 Vat

எவ்வாறாயினும் எரிபொருள் மற்றும் எல்பி எரிவாயுவுக்கான 7.5% துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரியை (பிஏஎல்) நீக்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக பெரேரா கூறினார்.

ஜனவரி 01, 2024 முதல் VAT நடைமுறைக்கு வந்தவுடன் எரிபொருள் மற்றும் LP எரிவாயுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மேம்பாட்டு வரி (PAL) நீக்கப்படும் என்று பெரேரா மேலும் கூறினார்.