ஜனவரியுடன் நுவரெலியா தபால் நிலையம் வர்த்தக நடவடிக்கைக்கு ஒப்படைப்பு: புதிய கட்டித்துக்கான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

0
247

நுவரெலியா தபால் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான 3 கட்டிடங்கள் தபால் திணைக்களத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த இடங்களை ஆய்வு செய்து, தபால் துறை அளிக்கும் ஒப்புதலின் அடிப்படையில், தபால் நிலையம் அமைப்பதற்கு தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என, நகர அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

தற்போது தபால் நிலையம் அமைந்துள்ள பழைய கட்டிடத்தை ஜனவரி மாதம் முதலீட்டு திட்டத்திற்கு ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

காலனித்துவ கால தொல்பொருள் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை விற்பனை செய்வதற்கு எதிராக தபால் ஊழியர்கள் பல வேலை நிறுத்தங்களை நடத்தியும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. தற்போது அதனை வர்த்தக நடவடிக்கைக்காக வழங்க உள்ளதை நகர அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.