நடுவர்களை அதிர வைத்த இளைஞனின் நடனம்!

0
446

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “நடன ஜோடி நடனம் ரீலோடட் 2” வில் மறைந்து வரும் “கணியான் கூத்து” கலையை மக்களுக்கு நினைவு கூர்ந்துள்ளது. திரைப்படங்களில் அல்லது நாடகங்களில் ஆண்கள், பெண் வேடமணிந்து நடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் புராண காலத்தில் இருந்தே தெய்வத்துக்காக பெண் வேடமணிந்து கூத்து நடத்தும் “கணியான் கூத்து” என்பது நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். திருவிழாக்களில் கணியான் கூத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம்.

நள்ளிரவில் தொடங்கும் இந்தக் கூத்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரை தொடர்ந்து நடைபெறும். தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் கூத்து முழுவதையும் மக்கள் பயபக்தியோடு பார்த்துச் செல்வர்.

கணியான் என்ற குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த கலைக் கூத்து இப்போது அழிந்துவரும் கலையாக உள்ளது.

இயல், இசை, நாடகம் என மூன்று அம்சங்களையும் தன்னகத்தே கொண்டதுதான் கணியான் கூத்து. கணியான் ஆட்டம், மகுட ஆட்டம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் கூத்தில் மொத்தம் ஏழுபேர் மட்டுமே இடம்பெறுவர்.

ஏதாவது ஒரு காவல் தெய்வத்தின் கதையை தேர்வு செய்து அதனை பாட்டு, நடனம், நாடகம் என பல அம்சங்களுடன் மக்களுக்கு விருந்தளிப்பதுதான் கணியான் கூத்தின் சிறப்பம்சம்.

இந்த பழமையான கலையை இளைஞர் ஒருவர் தன் மக்களுக்காக ஆடியுள்ளார். இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி இணைத்தில் வைரலாகி வருகின்றது.