”அச்சு அசல் எம்.ஜி.ஆரைப் போல் இருக்கும் இவரின் பெயர் ரெய்சார்னாடெட் இலங்கையை சேர்ந்தவர் ” எனும் வாசகத்துடன் காணொளிப் பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.
x தளம், tiktok, யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குறித்த காணொளி பகிரப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த காணொளியை Google Reverse செய்து அதன் உண்மைத்தன்மை குறித்து fact seeker ஆராய்ந்துள்ளது.
இதன்படி குறித்த காணொளி Artificial Intelligence (AI) தொழிநுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டவை என்பதை கண்டறிய முடிந்துள்ளது.

இது குறித்து AI தொழிநுட்பம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நபரும் சேவ்தெம் இந்தியா பௌன்டேஷன் ஸ்தாபகருமான பிரவீன் கலைச்செல்வனிடம் fact seeker வினவிய நிலையில் குறித்த காணொளிகள் AI தொழிநுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டவை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் “அச்சு அசல் எம்.ஜி.ஆரைப் போல் இருக்கும் இவரின் பெயர் ரெய்சார்னாடெட் இலங்கையை சேர்ந்தவர்” என சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறித்த காணொளி AI தொழினுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் (MGR) உருவத்தை ஒத்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்பதை fact seeker உறுதிப்படுத்தியுள்ளது.