விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: தேமுதிக வெளியிட்ட அறிக்கை

0
300

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மருத்துவமனையில் மூன்று வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12-ம் திகதி வீடு திரும்பினார்.

தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் அவர் மீண்டும் தற்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.