பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து மதப் பெண்

0
350

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து மதப் பெண் | Hindu Woman Contesting Pakistan General Election

இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவில் போட்டியிட சவீரா பர்காஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். சவீரா பர்காஷ் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மருத்துவராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இவரது தந்தை ஓம் பர்காஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் 35 ஆண்டுகாலமாக உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் தந்தையின் அடியை பின்பற்றி, மகளும் அரசியலில் பயணிக்க, இன்று முதல் இந்துப் பெண்ணாக பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து மதப் பெண் | Hindu Woman Contesting Pakistan General Election

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ப ல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு சிக்குண்டு கிடக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

அதேவேளை 2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.