கொழும்பில் இயக்கப்படும் சுனாமி புகையிரதம்

0
225

கடந்த (2004.12.26) ஆம் திகதி பெரேலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26.12.2023) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை புகையிரதம் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

மருதானை நிலையத்திலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய ரயில் என்ஜின் 591 இன்று பயணிக்கின்றமை ஒரு சிறப்பு அம்சமாகும்.

591 ஆம் இலக்க என்ஜினுக்கு கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். புகையிரதம் புறப்பட்டு பரேலிய நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு சுனாமி நினைவேந்தல் நடைபெறும். 

கொழும்பில் இயக்கப்படும் சுனாமி புகையிரதம் | Tsunami Train Operated In Colombo