தெற்கு காஸாவில் போர் தீவிரம்: ஹமாஸ் தரப்பின் பதிலடி தாக்குதலில் 14 இஸ்ரேலிய வீரர்கள் பலி

0
169

தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு நாட்களில் 14 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே ஹமாஸ் தரப்பினரும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வடக்கு காஸா பகுதியை முற்றிலுமாக அழித்துள்ள இஸ்ரேல் இராணுவம் தற்போது மத்திய மற்றும் தெற்கு காஸாவில் போரை தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய மற்றும் தெற்கு காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் படையினரும் எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே ஹமாஸ் தர்ப்பின் தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள இராணுவம், தரைவழி தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 152 வீரர்களை போரில் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இறந்த 14 வீரர்கள் 4 பேர் ஏவுகணை தாக்குதலிலும், மற்றவர்கள் துப்பாக்கி சண்டையிலும் உயிரிழந்துள்ளனர். ஹமாசின் இந்த தீவிரமான தாக்குதலுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.