யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடைந்தால் தமிழரசு கட்சியுடனான அரசியலில் நீடிப்பது கேள்விக்குரிய விடயம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார். இதன் மூலம் தமிழரசு கட்சி இரண்டாக பிளவு படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழ் மக்களை சிதைப்பதற்காகவே போலி துவாரகா விவகாரம் மற்றும் இமாலயா பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
