கிரிக்கெட்டுக்கு பிறகு நான் என்ன செய்வேன்: தோனியின் சுவாரஸ்யமான பதில்

0
214

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இரு ரசிகர் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த தோனி, ”நான் ஓய்வுக்கு பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று இதுவரை யோசிக்கவில்லை. ஏனென்றால் நான் இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

ஐபிஎல் தொடரில் இன்னும் இருக்கிறேன். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு நான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து யோசிக்க எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

ஆனால் நிச்சயமாக ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்வேன். இந்திய ராணுவத்துடன் இணைந்து கூடுதல் நேரத்தை செலவிடுவேன்” என்றார்.

Oruvan