இலங்கைக்கு நன்கொடையாக மருந்துகளை வழங்கிய பங்களாதேஷ்

0
183

பங்களாதேஷ் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இருபத்து நான்கு அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த நன்கொடையானது இலங்கை அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு இணங்க பங்களாதேஷின் அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான Essential Drugs Company Limited (EDCL) இனால் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு நன்கொடையாக மருந்துகளை வழங்கிய பங்களாதேஷ் | Bangladesh Donated Medicines To Sri Lanka