அரச ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் ஷெஹான் சேமசிங்க தகவல்

0
143

இலங்கையிலுள்ள வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு  கொடுப்பனவு  வழங்கும் செயன்முறை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 இல் நிறுவனத்தின் நிதிச் செயற்பாட்டின் அடிப்படையில் போனஸ் கொடுப்பனவுகளுக்கு அரச ஊழியர்கள் தகுதி பெறுவார்கள்.

தகுதி பெற, ஒரு நிறுவனம் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

2022 நிதியாண்டில் இலாபம் ஈட்டிருக்க வேண்டும் வரிக்குப் பிந்தைய இலாபத்தில் குறைந்தபட்சம் 30% ஒருங்கிணைந்த நிதியாக அரசாங்கத்தின் மத்திய திறைசேரிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்தத் தேவைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்யத் தவறிய அரச நிறுவனங்கள் இலாபப் பகிர்வு போனஸுக்குத் தகுதி பெறாது என்றுத் தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கு மேலதிகமாக 2022 நிதியாண்டில் நஷ்டம் ஏற்பட்ட எந்தவொரு அரச நிறுவனமும் செயல்முறையிலிருந்து விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.