மகிந்த ராஜபக்சவை சந்தித்தமை உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது..! கனேடிய தமிழ் காங்கிரஸ் கவலை

0
167

இமாலயபிரகடனத்தை கையளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தமை உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதை அறிந்துள்ளதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதோடு இந்த சந்திப்பின் மூலம் ஏற்பட்டுள்ள வலிகள் குறித்து கவலையடைவதாகவும் கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பு தொடர்பில் கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளதாவது,

தமிழர்களிற்கான நிரந்தர அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தை

பன்முகத்தை தன்மை குறித்த ஈடுபாடுகளிற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்களை கொண்ட பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்தோம்.

செல்வாக்கு செலுத்தக்கூடிய எவரும் இமாலய பிரகடனம் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளிற்கான அதன் ஆணை குறித்து அறிந்துகொள்ளச்செய்வதே இதன் நோக்கம்.

இந்த சந்திப்பின் படங்களும் இந்த சந்திப்பும் கனடா தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கடுமையான உணர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதை நாங்கள் அறிகின்றோம்.

மஹிந்தவுடனான சந்திப்பு குறித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் கவலை | Canadian Tamil Congress Worried Meeting Mahinda

நாங்கள் நேர்மையாகவே இது குறித்து கவலையடைகின்றோம் இந்த வேதனையை பகிர்ந்துகொள்கின்றோம் எனவும் கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த சந்திப்பின்மூலம் வேதனையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை.

இமாலய பிரகடம் மற்றும் அது தொடர்பான சந்திப்புகளிகளின் முக்கிய நோக்கம் இலங்கையின் சம்மந்தப்பட்ட பங்குதாரர்கள் அனைவரையும் உள்வாங்கி தமிழர்களிற்கான நிரந்தர அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் எனவும் கனேடிய தமிழ் காங்கிரஷ் தெரிவித்துள்ளது.

மேலும் நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் எவற்றிலும் ஈடுபடவில்லை அதற்கான பொறுப்பு தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களிடம் உள்ளதாகவும் கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.