அழகுசாதன பொருட்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை

0
192
List of Essential Makeup Items for Beginners

கொழும்பு, புறக்கோட்டையில் காலாவதியான அழகுசாதன பொருட்களான கிரீம் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இநிலையில் மோசடியை தடுக்கும் நடவடிக்கையில் நுகர்வோர் அதிகார சபை சோதனைகளை முன்னெடுத்துள்ளது.

காலவாதியான வாசனை திரவியங்கள்

இதன்படி, புறக்கோட்டையின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதியின் நடைபாதையில் காலவாதியான வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நுகர்வோர் அதிகார சபையால் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.