தடம்புரண்ட யாழ்.தேவி; ரயில் சேவையில் தாமதம்!

0
144

மஹவ நிலையத்திற்கு அருகில் யாழ்தேவி கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.