ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (டிசம்பர் 20) தனது கட்சி அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வணிக அதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நான்கு வேட்பாளர்களின் பெயர்களை பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒரு கட்சி என்ற ரீதியில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி முழுமையானதாக இருக்கும்.

“நாங்கள் நான்கு வேட்பாளர்களை பரிசீலித்து வருகிறோம். தம்மிக்க பெரேரா வேட்பாளர்களில் ஒருவர். எங்களின் சிறந்த வேட்பாளரை முன்னிறுத்துவோம்” என்று அவர் மேலும் கூறினார்.