மீண்டும் உயிர்பெற்ற ஸ்ரீ ராமபக்தர்: அதிரடி சண்டை காட்சிகளுடன் மிரட்டும் ஹனுமான் பட ட்ரைலர்

0
141

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ஹனுமான் படத்தின் ட்ரைலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இராமாயணத்தின்படி ஸ்ரீ இராமரின் பக்தனாக வாழ்ந்து, மரணம் இல்லாத மனிதராக வலம் வரும் ஹனுமானின் கதையை கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்காலத்தில் தொழில்நுட்ப சக்தி கொண்ட வில்லன்களுக்கும், அவர்கள் அடைய நினைக்கும் மலைவாழ் கிராம மக்களின் சக்திக்கும் இடையே நடக்கும் சண்டையில் யாருக்கு வெற்றி? என்ன நடந்தது? என்பது தொடர்பான காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளன.

மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பேனிஷ், கொரியா, ஜப்பானியம், சீன மொழிகளிலும் ஜனவரி 12ம் திகதி வெளியாகிறது.