சீனாவில் மூன்று ஆண்டுகளில் 7 கொலைகள்: பெண் சீரியல் கில்லருக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு!

0
165

சீனாவில் மூன்று ஆண்டுகளில் 7 பேரை கொலை செய்த பெண் சீரியல் கில்லர் லாவோ ராங்சி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

49 வயதான லாவோ ராங்சி 1996 முதல் 1999 வரையிலான 3 ஆண்டுகளில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் 7 பேர் கொடூர கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக பொலிஸார் அவரை தேடி வந்தனர். 

மூன்று ஆண்டுகளில் 7 கொலைகள்: பெண் சீரியல் கில்லருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி தீர்ப்பு! | Female Serial Killer Rongzhi Death Penalty China

20 ஆண்டுகளாக பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் திகதி புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரில் வாட்ச் விற்பனையில் ஈடுபட்டிருந்த அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவருடைய அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றிய வழக்கு விசாரணையில் லாவோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.