நடிகர் பிரபு மகளுக்கு எளிமையாக திருமணம் நடக்க காரணம்: மாநாடு போல பிரம்மாண்டமாக நடத்த நினைத்த பிரபு

0
264

தமிழ் சினிமா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஐஸ்வர்யாவுக்கு இது மறுமணமாகும்.

ஆதிக் – ஐஸ்வர்யா திருமணம் எளிமையாக நடந்தாலும் வரதட்சணையில் பிரபு எந்தவொரு குறையும் வைக்கவில்லை என கூறப்படுகிறது. பல கோடி பணம், நகைகள், சொகுசு கார்கள், பங்களா என ஆதிக்குக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Oruvan

இந்த நிலையில் திருமணம் எளிமையாக நடைபெற்றது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும் போது, “இந்தத் திருமணத்தை பெரிய மாநாடு போல பிரம்மாண்டமாக நடத்தவே பிரபு மற்றும் குடும்பத்தார் ஆசைப்பட்டனர்.

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் இந்தத் திருமணத்தை எளிமையாக வைத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கின்றனர். இருந்தாலும் பெரிதும் பேசப்பட்ட திருமண நிகழ்வாக இது மாறியது” என கூறியுள்ளார்.