பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி 7 திருமணம்: சிக்கிய காஷ்மீரை சேர்ந்த மோசடி மன்னன்

0
155

இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்த நபர் பிரதமர் அலுவலக அதிகாரி என கூறிக் கொண்டு 7 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

37 வயதான சயீத் இஷான் புகாரி என்ற நபர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி, நரம்பியல் நிபுணர், ராணுவ மருத்துவர் என பல வகையான பொய்களை கூறி போலியான ஆவணங்களை வைத்து பெண்களை ஏமாற்றியுள்ளார். அந்த வகையில் காஷ்மீர், உத்தரபிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிராவை சேர்ந்த 7 பெண்களை திருமணம் செய்திருக்கிறார்.

சயீத்துக்கு பாகிஸ்தானில் சிலருடன் பழக்கம் இருப்பதும், கேரளாவில் சந்தேகத்துக்குரிய நபர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஒடிசாவில் இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சயீத் மீது பல்வேறு மோசடி வழக்குகள் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.